சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக அரசாங்கம் உதவும்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக அரசாங்கம் உதவும்

1 mins read

தொழில்நுட்ப இடையூறுகளுக்கு மத்தியில் அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக் கமயமாகி தொழிலில் நீடித்திருக்க உதவுவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. தகவல்தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையம், சிறிய நடுத்தர நிறுவனத் துறையின் "தலைமை தகவல் அதிகாரி" போல செயல் பட்டு, பிரத்தியேக நிதி உதவியும், முன்தகுதி பெறும் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு ஆலோசனையும் வழங்குவதோடு கூட்டு முன்னோட் டத் திட்டங்களிலும் பங்குபெறும்.

"மின்னிலக்கப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத் துவது என்பது பற்றி படிப்படியான ஆலோசனை வழங்குவதன்மூலம் சிறிய நடுத்தர நிறுவனங்களின் மின்னிலக்கத் தயார்நிலையை மேம்படுத்த இத்திட்டம் உதவும்," என்று தொடர்பு தகவல் அமைச் சர் யாக்கூப் இப்ராஹிம் நாடாளு மன்றத்தில் கூறினார்.