சிறிய வீடு வாங்க விரும்பும் முதியோருக்குக் கூடுதல் உதவி

சிறிய வீடு வாங்க விரும்பும் முதியோருக்குக் கூடுதல் உதவி

1 mins read

சிறிய வீவக வீடு வாங்கும் முதியோருக்குக் கூடுதல் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன. அதில் ஒன்று, பின்செலுத்தும் ஆரம்பத் தொகைத் திட்டம். இதன்படி, இவ்வாண்டு மே மாதம் முதல் அறிமுகமாகவுள்ள தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை வாங்கத் தகுதியுடைய 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வீட்டின் சாவியைப் பெறும்போது ஆரம்பத் தொகையைச் செலுத்தினால் போதும். இந்தத் திட்டம் 'ஈரறை ஃபிளெக்ஸி' அல்லது மூவறை வீடுகளுக்கு மட்டும் பொருந்தும். அத்துடன், புதிய தற்காலிக கடன் திட்டமும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வீடு வாங்க விரும்புவோர் அடைமானம் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டிற்கு நிதி திரட்ட முடியும். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று இத்திட்டங்களை அறிவித்தார்.