சமய போதகர் ஒருவர் கிறிஸ் தவர்கள், யூதர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து பற்றி கடிந்து கொண்ட ஒருவரை வெளிப்படையாகக் குறைகூறியிருந்தார் இணை பேராசிரியர் கைருடின் அல்ஜுனிட். அதனையடுத்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அவரை மார்ச் 6ஆம் தேதி முதல் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கி யுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பேராசிரியர் கைரு டினின் ஈடுபாடு குறித்து அப் பல்கலைக் கழகம் உள்விசா ரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பேராசிரியர் கைருடின் நீக்கம்
1 mins read

