85 இந்திய மீனவர்களை விடுவிக்கும் இலங்கை

85 இந்திய மீனவர்களை விடுவிக்கும் இலங்கை

1 mins read

சிறைபிடிக்கப்பட்ட 85 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவெடுத்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவர் என்று தி இந்து நாளிதழிடம் இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதை அடுத்து, இந்தியாவால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள 19 இலங்கை மீனவர்களும் நாடு திரும்பக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக் கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.