'எஸ்ஜிகேர்ஸ்' தொண்டூழிய இயக்கம் தொடக்கம்

'எஸ்ஜிகேர்ஸ்' தொண்டூழிய இயக்கம் தொடக்கம்

1 mins read

தேசிய அளவிலான தொண்டூழிய இயக்கமான 'எஸ்ஜிகேர்ஸ்', இவ்வாண்டு பிற்பகுதியில் தொடங்கப்படவுள்ளது. "சிங்கப்பூரர்களின் நல்லெண் ணத்தை ஊக்குவிக்கவும் ஒருவர் மற்றொருவருக்கு உதவ முன்வரவும் இந்த இயக்கம் உந்துதல் அளிக்கும்," என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பரிவு காட்டும் மக்களைப் பேணிக் காக்க இவ்வாண்டு அமைச்சு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் அமையும்.