மெடிசேவ் சேமிப்பின் பயன்பாட்டுக் கான அதிகபட்ச வரம்பைப் பயன் படுத்தி முடித்த பிறகு, சுகாதாரப் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்த மெடிசேவ் கணக்கிலி ருந்து கூடுதல் சேமிப்பைப் பயன் படுத்த அனுமதி கோரி ஆண்டுக்கு சுமார் 200 பேர் சுகாதார அமைச் சிடம் முறையீடு செய்கின்றனர். இவர்களில் சுமார் பாதிப் பேருக்கு அனுமதி வழங்கப்படுவ தாக சுகாதாரத் துணை அமைச் சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார். மெடிசேவ் சேமிப்பிலிருந்து கூடுதல் தொகையைப் பயன்படுத்த முடியுமா இல்லையா என்பது ஒவ்வொருவரின் சூழ்நிலையின் அடிப்படையிலும் தீர்மானிக்கப் படுகிறது.
தெம்பனிஸ் பலதுறை மருந்தகத்தில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். கோப்புப் படம்

