மூத்த கலைஞர் நீலா சத்தியலிங்கத்தின் மறைவுக்குச் சமூகத்தினர் இரங்கல்

மூத்த கலைஞர் நீலா சத்தியலிங்கத்தின் மறைவுக்குச் சமூகத்தினர் இரங்கல்

1 mins read
1da7fb75-25b6-488d-8526-417140cb4239
-

வில்சன் சைலஸ்

சிங்கப்பூரின் கலைத் திறனை உலக மேடைகளில் அரங்கேற்றி நூற்றுக்கணக்கான கலைஞர்கள் உருவாக அடித்தளமாகத் திகழ்ந்த முன்னோடி நடனக் கலைஞர்களில் ஒருவரான திருமதி நீலா சத்திய லிங்கம், நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79. தமது கணவர் அமரர் எஸ். சத்தியலிங்கத்துடன் 1977இல் திருமதி நீலா தொடங்கிய 'அப்சராஸ் ஆர்ட்ஸ்' கலை நிறுவனம் சிங்கப்பூரில் பல நடனக் கலைஞர்களையும் நடன ஆசிரியர் களையும் உருவாக்கிய பெருமைக் குரியது. அதில் முக்கிய பங்கு வகித்த திருமதி நீலாவின் மறைவு தாளாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அரவிந்த் குமாரசாமி.