எஸ்பிஎச் ரேடியோ பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் புதிதாக இரண்டு வானொலி நிலையங்களை நடத்துவதற்கான உரிமத்தை ஏலக்குத்தகையில் பெற்றிருக்கிறது. அந்த நிலையங்களில் ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று மாண்டரின் மொழியிலும் சேவையாற்றும். அவை 2017 டிசம்பரில் தொடங்கப்படும். இந்த நிலையங்களுக்கான உரிமத்தை ஏலக்குத்தகையில் பெறுவதற்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்படி தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2016 ஜூனில் அறிவிப்பு விடுத்தது. இந்தப் புதிய இரண்டு சேவைகளும் FM 89.3 மற்றும் FM 96.3 ஆகிய அலை வரிசைகளில் செயல்படும்.
புதிதாக இரு வானொலிகளை நடத்த எஸ்பிஎச் ரேடியோவுக்கு உரிமம்
1 mins read

