கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் எல்லா நோயாளிகளிடத்திலும் ஒரே மாதிரியாக இல்லை என்றும் அவை ஒவ்வொருவரிடத்திலும் வேறுபட்டு இருப்பதாகவும் ஆகையால் நோயாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை சரிபட்டு வராது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம், சிங்கப்பூர் ஜினோம் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இவ்வாறு கண்டுபிடித்து இருக்கிறார்கள். கல்லீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சேர்ந்த காரணிகள் மிகவும் வேறுபட்டு இருக்கின்றன. நோயாளிகளிடையே பல வடிவங்களில் காணப்படும் அந்தக் காரணிகள் ஒரு கட்டிக்கு உள்ளேயே வேறுபட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகையால் ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான தனி சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லீரல் புற்றுநோய்க் கட்டிகள்: ஒரே மாதிரியான சிகிச்சை பலன்தராது
1 mins read

