சிங்கப்பூர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறு வனத்தின் விசா கட்டுப்பாட்டு அட்டவணையில் சிங்கப்பூர் கடவுச் சீட்டுக்கு இந்த ஆண்டு இது வரை இல்லாத அளவுக்கு நான் காவது இடம் கிடைத்திருக்கிறது. உலகளவில் எந்த நாட்டுக் கடவுச்சீட்டுக்கு பயணச் சுதந்திரம் அதிகமாக இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அத்தகைய கடவுச் சீட்டுகளை இந்த அட்டவணை வரிசைப்படுத்துகிறது. சிங்கப்பூர் கடவுச்சீட்டும் ஜப்பான் கடவுச்சீட்டும் சென்ற ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு சிங்கப்பூர் ஓர் இடத்திற்கு முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லா மல் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் 173 நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் பயணம் செய்ய முடியும்.
விசா இல்லாமல் 173 நாடுகள், வட்டாரங்களுக்குச் செல்லலாம்
1 mins read

