சாலை விபத்தில் முன்னாள் ரக்பி வீரர் மரணம்

சாலை விபத்தில் முன்னாள் ரக்பி வீரர் மரணம்

1 mins read
02259b91-5aac-4cbc-b608-2c9db7654947
-

உள்ளூர் ரக்பி விளையாட்டில் பிரபலமாக இருந்த 57 வயது திரு சிலாமாட் ரக்கிசான் நேற்று முன்தினம் கிராஞ்சி விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார். திரு ரக்கிசான் செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளி ரக்பி அணி, சிங்கப்பூர் தேசிய ரக்பி அணி ஆகியவற்றின் முன்னாள் வீரர். அதுமட்டுமல்லாது, சிங்கப்பூர் ரக்பி சங்கத்தில் துணைத் தலை வராகவும் சிங்கப்பூர் ரக்பி யூனியன் நடுவர்களுக்கான மன்றத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. பல உயர்நிலைப்பள்ளிகளின் ரக்பி அணிகளுக்கும் அவர் பயிற்சி அளித்தார்.