பயங்கரவாதத்தை தவிர்க்க வலுவான சமூகப் பிணைப்பு - பிரதமர்

பயங்கரவாதத்தை தவிர்க்க வலுவான சமூகப் பிணைப்பு - பிரதமர்

1 mins read
c72a0312-a484-4bff-b833-11854dfd85ab
-

பயங்கரவாத மிரட்டலைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக சமூகப் பிணைப்பை வலுப்படுத்து மாறு சிங்கப்பூரர்களை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற விழையும் பயங்கரவாதிகள், பொதுமக்களைக் காயப்படுத்து வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்ற திரு லீ, சிங்கப்பூரர் களைப் பிளவுபடுத்துவதும் அவர்களின் நோக்கமாக இருக் கும் என்று எச்சரித்தார். இதன் காரணமாக சிங்கப் பூரர் கள் தங்களுடைய அண்டை வீட்டாரைத் தெரிந்து கொண்டு இதர இனத்தவருடன் நட்புறவை வலுவாக் கிக் கொள்ளவேண்டி யது மிகவும் அவசியமானதாக ஆகி இருக்கிறது என்று பிரதமர் விளக்கினார்.