புதுடெல்லி வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வரன் பங்கேற்பு

புதுடெல்லி வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வரன் பங்கேற்பு

1 mins read

வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் இரண்டு நாள் பயணமாக இந்தியத் தலை நகர் புதுடெல்லி சென்றுள்ளார். இன்று அங்கு நடைபெறும் 'தி குரோத் நெட்' உச்சநிலைக் கூட் டத்தில் பங்கேற்பார். மாறிவரும் தொழில்நுட்பவியல் மேம்பாடுகள், உலகமயமாதல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கங்கள் எவ் வாறு வளர்ச்சியை மேம்படுத்துவதி லும் பொருளியல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் முனைப்பு காட்டலாம் என்பது பற்றி திரு ஈஸ்வரன் உரை நிகழ்த் துவார்.