சிங்கப்பூருக்கு 26வது இடம் உலகின் ஆக மகிழ்ச்சிமிக்க நாட்டுப் பட்டியலில் சிங்கப்பூர் நான்கு இடங்கள் கீழே இறங்கி 26வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கடந்த ஆண்டு 22வது இடத்தில் இருந்தது. பட்டியலில் நார்வே முதலி டத்தைப் பிடித்தது. இம்முறை அந்நாடு டென்மார்க்கை இரண் டாவது இடத்திற்குத் தள்ளியது. கடந்த 2012ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை தொடங் கிய அனைத்துலகத் திட்டமான, நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் கட்டமைப்பு (எஸ்டிஎஸ்என்) மேற்கொண்ட உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தப் பட்டியல் விவரங்கள் தெரியவந்தன. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, ஹாலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்தி ரேலியா, சுவீடன் ஆகிய எஞ்சிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்தன.
உலகின் மகிழ்ச்சிமிக்க நாடுகள் பட்டியலில்
1 mins read

