கோவன் பகுதியில் நேற்றுக் காலை 8.15 மணிக்கு நிகழ்ந்த வாகன விபத்து ஒன்றில் 56 வயது ஆடவர் ஒருவர் காருக்குள் சிக்கிக் கொண்டார். அரூஸு அவென்யூவுக்கும் சார்ல்ட்டன் ரோட்டுக்கும் இடையே இடது பக்கம் வாகனத்தைத் திருப்ப முயற்சி செய்யும்போது நேராகச் சென்று கொண்டிருந்த இன்னொரு வாகனத்தின் மீது மோதினார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு குடிமைத் தற்காப்புப் படை ஒரு தீயணைப்பு வாகனம், ரெட் ரைனோ, தீயணைப்பு மோட்டார் கோவன் விபத்தில் வாகனத்திற்குள் சிக்கிய ஆடவர் பத்திரமாக மீட்பு சைக்கிள், இரண்டு அவசர மருத் துவ வாகனங்களை அனுப்பி வைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது. விபத்தில், வாக னத்திற்குள் சிக்கிக்கொண்டிருந்த ஆடவரை குடிமைத் தற்காப்புப் படையினர் போராடி பத்திரமாக மீட்டனர். சுய நினைவுடன் இருந்த அவர், டான் டோக் செங் மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார்.
கோவன் விபத்தில் வாகனத்திற்குள் சிக்கிய ஆடவர் பத்திரமாக மீட்பு
1 mins read

