தனது வருடாந்திர சம்பள பரிந்துரைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தேசிய சம்பள மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மன்றம் கூடி இந்த ஆண்டுக்கான சம்பள பரிந்துரைகளையும் அதற்குரிய வழி காட்டிகளையும் முடிவெடுக்கும் என்று மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது. "சம்பள பரிந்துரைகளை வகுக்கும்போது, சிங்கப்பூரின் பொருளியல் நிலைமை, அதன் போட்டித்தன்மை, உள்நாட்டு, உலகளாவிய பொருளியல் நிலை, தொழிலாளர் சந்தை நிலைமை, பணவீக்கம், உற்பத்தித்திறன் வளர்ச்சி ஆகியவற் றைக் கருத்தில் கொண்டு தேசிய சம்பள மன்றம் செயல் படும்," என்றும் அறிக்கை கூறியது. தேசிய சம்பள மன்றத்தில் என்டியுசி ஊழியர் சங்கங் களின் பிரதிநிதிகள். முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
வருடாந்திர சம்பள வழிகாட்டிகள்: கருத்து கூற மக்களுக்கு அழைப்பு
1 mins read

