லண்டனில் கடந்த புதனன்று நிகழ்ந்தது போன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கும் வகையில் தவறு நிகழ வாய்ப்பே இல்லாத பாதுகாப்பு இருக்க முடியாது என்பதாலும் அனைத்துலக அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாலும் சிங்கப்பூர் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். "பயங்கரவாதத் தாக்குதல் வேறு எங்கேனும் நிகழ்ந்திருக்கலாம், சிங்கப் பூரில் ஒருபோதும் நிகழாது என்று யாரும் கூற இயலாது," என்றார் பிரதமர் லீ.
"அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், 'இது மோசமானது, இதற் கான பின்னணி என்ன என்பதைக் கண்டறிவோம், நாம் செய்ய வேண்டி யதைச் செய்வோம், அதே நேரத்தில் வாழ்க்கையைத் தொடர்வோம். நாளை மற்றுமொரு நாளே, சிங்கப்பூர் நிலைத்து இருக்கும்' என்று சொல்லும் வகையில் மனஉறுதியையும் மீள்திறனையும் ஒற் றுமை உணர்வையும் நாம் கொண்டிருக்க வேண்டும்," என்றும் திரு லீ கேட்டுக் கொண்டார்.

