வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்- பழைய வீடுகள் அனைத்தும் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறு சீரமைப்புத் திட்டத்துக்குத் (Sers) திண்ணமாகத் தகுதி பெ-றும் என்று கருதிவிடக்கூடாது என்று புதிதாக வீடு வாங்குவோரிடம் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். -இந்தத் திட்டத்துக்காகத் தேர்ந்தேடுக்கப்படும் புளோக்கு களைத் தேர்வு செய்ய தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான பரிசீலனை அணுகுமுறை தொடரும் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நேற்று குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டு மொத்த மறுசீரமைப்புத் திட்டம் 1995ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்துக்காக சிங்கப்பூரில் இருக்கும் வீவக வீடுகளில் நான்கு விழுக்காட்டு வீடுகள் மட்டுமே அடையாளம் காணப் பட்டுள்ளன.
மறுசீரமைப்புத் திட்டம்: 'அனைத்து பழைய வீடுகளுக்கும் பொருந்தாது'
1 mins read

