ஆடவரைத் தாக்கியவர்களுக்குச் சிறைத் தண்டனை

ஆடவரைத் தாக்கியவர்களுக்குச் சிறைத் தண்டனை

1 mins read
47a00c30-3caf-4ea0-bd52-af81fde742d1
-

தமது மகளைத் தம்முடன் அழைத்துச் செல்ல முன்னாள் காதலர் தடுத்ததை அடுத்து, தமது காதலர், முன்னாள் கணவர் ஆகியோரின் உதவியை நாடினார் 31 வயது சிட்டி நூர்ஹாய்சா அப்துல்லா. முன்னாள் கணவரான 31 வயது அப்துல் ஹலில் ஒஸ்மான், காதலரான ரஹ்மாட் ஜுமாரி ஆகியோருடன் சேர்ந்து திரு முகம்மது அப்துல் லதீப்பை சரமாறியாக அடித்தும் உதைத்தும் காயமடையச் செய்ததை சிட்டி ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் அவென்யூ 4ல் உள்ள ஒரு புளோக்கின் பொதுத் தாழ்வாரத்தில் நிகழ்ந்தது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிட்டி (இடது), ரகாட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்