சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான இல்ல உதவியாளர்கள் நமது அன்புக்குரியவர்களைத் தங்களது சொந்தக் குடும்பத்தினர் போல பராமரிப்பதாகவும் அதனை நாம் மறந்துவிடலாகாது என்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித் துள்ளார். ஈராண்டுக்கு ஒருமுறை பரா மரிப்பாளர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்று அவர் பேசி னார். இந்நிகழ்வில் 40 தனிப்பட்ட பராமரிப்பாளர்கள் அல்லது குடும் பங்களுக்கு நேற்று 'முன்மாதிரி பராமரிப்பாளர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற் றவர்கள் 28க்கும் 79க்கும் இடைப்பட்ட வயதினர்.
விருதுகளை வழங்கிய டாக்டர் ஏமி கோர், ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் அன்பு நிறைந்த சோகக் கதைகளும் பெரும் தியாகங்களும் மறைந்திருப்ப தாகக் குறிப்பிட்டார். லாப நோக்கமற்ற அமைப்பான AWWA பராமரிப்பாளர் சேவை, தேசிய சமூகச் சேவை மன்றம் ஆகியவை ஏராளமான அமைப்பு களுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்தி இந்தப் பராமரிப்பாளர் விருது நிகழ்ச்சியைக் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஈராண் டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரு கின்றன.

