முதியோருக்கு ஏதுவான உட்கார்ந்தவாறு செய்யும் ஏழு உடற்பயிற்சிகள் அறிமுகம்

முதியோருக்கு ஏதுவான உட்கார்ந்தவாறு செய்யும் ஏழு உடற்பயிற்சிகள் அறிமுகம்

1 mins read
7a525a3b-d02f-4918-b947-cc575906b8b6
-

முதியவர்கள் உடல்நலத்துடன், சுறுசுறுப்பாகத் திகழ உதவும் வகையில் எளிய ஏழு உடற்பயிற்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஜூரோங்கை சேர்ந்த முதியவர்கள் நேற்று அத்தகைய பயிற்சியில் ஈடுபட்டார்கள். சுகாதார மேம்பாட்டு வாரியத் தின் 'இன்னமும் நீங்கள் இயன்ற வரை இயங்கலாம்' என்ற இயக் கத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்த உடற்பயிற்சி தொடர் நடந் தது. அந்தப் பயிற்சி முதியவர் களுக்கு, அவர்களின் உடலின் மேல்பகுதியில் தசைகள் நன்கு உறுதிபட உதவுகிறது. அவ்வளவாக நடமாட்டம் இல்லாத முதியவர்கள் உடலில் பலத்தை ஏற்படுத்தி, அவர்கள் எழுந்து நடக்கும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்கும் வகையில் சமநிலையை மேம் படுத்தி, அவர்கள் நன்கு குனிந்து நிமிரும் வகையில் தசை களில் இறுக்கத்தைக் குறைப்பது இந்தப் பயிற்சிகளின் நோக்கம்.

''இன்னமும் நீங்கள் இயன்ற வரை இயங்கலாம்'' என்ற சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் இயக்கத்தையொட்டி நேற்று கனோபி அட் ஜே லிங்க்கில் நடந்த பயிற்சியில் முதியோர் பலரும் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்