சிங்கப்பூரும் பிரான்சும் புத்தாக்கம் தொடர்பிலான தொழில்துறைகளில் இன்னும் அதிகமாக ஒத்துழைக்க இருக்கின்றன. விண்வெளி தொழில்நுட்பம், விவேக நகர் திட்டம், நிதித்துறைத் தொழில்நுட் பம், உடல்நல அறிவியல், உயிர் மருத்துவ அறிவியல் ஆகியவை இந்தத் துறைகளில் உள்ளடங்கும். சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகையளித்த பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலண்டும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் நேற்று கூட்டாக விடுத்த பிரகடனம் இவ்வாறு அறிவித்தது.
இந்த இரு தலைவர்களும் 2018வது ஆண்டை 'பிரான்ஸ்= சிங்கப்பூர் புத்தாக்க ஆண்டு' என்று பிரகடனப்படுத்தி இருக் கிறார்கள். இரண்டு நாடுகளிலும் 2018ல் புத்தாக்கத்தில் ஒத்துழைப்புக்கு அதிகமாக ஊக்கமூட்டும் நிகழ்ச்சி கள் இடம்பெறும். சிங்கப்பூரும் பிரான்சும் தங்கள் தங்களுக்குரிய புத்தாக்கச் சுற்றுச் சூழல் ஏற்பாடுகளை பலப்படுத்த முன்னுரிமை அளித்துள்ளன. ஆய்வு, உருவாக்கத்தை மேம் படுத்துவதற்கான செயல்திட்டங் கள், புத்தாக்க தொழில்முனைப் புக்கு ஆதரவு அளிக்கும் திட்டங் கள் எல்லாம் இவற்றில் அடங்கும் என்று பிரகடனம் குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகை அளித்த அதிபர் ஃபிரான்சுவா ஹொலாண்ட் (வலது) நேற்று இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்குடன் பேச்சு நடத்தினார். படம்: ஏஎஃப்பி

