முறை இன்று சோதனை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் உள்ள அனைத்து ரயில்களும், புதிய சமிக்ஞை முறை பரிசோதிக் கப்படுவதற்கு வகைசெய்ய இன்று இரவு 11 மணியளவில் ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு தண்டவாளத்தில் நிறுத்தப்படும். பயணச் சேவை நேரங்களில் முதல் முறையாக இம்முறை சோதிக் கப்படவுள்ளது. இந்தத் தருணத்தில் சுமார் 30 ரயில்கள் சேவையில் இருக்கும். சேவையில் ஏற்படும் தற்காலிகத் தடை குறித்து பயணி களுக்குத் தெரிவிக்க ரயில்களில் அறிவிப்புகள் செய் யப்படும் என நிலப் போக்குவரத்து ஆணை யமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் தெரிவித்தன. புதிய சமிக்ஞை முறை செயல்படும்போது ரயில் சேவைகள் தொடரும் என்று அவை கூறின.2017-03-28 06:00:00 +0800
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் புதிய சமிக்ஞை
1 mins read
-

