'கிராப்', 'உபர்' கார் சலுகை எனும் மோசடி: 60 வயது ஆடவர் கைது

'கிராப்', 'உபர்' கார் சலுகை எனும் மோசடி: 60 வயது ஆடவர் கைது

1 mins read
Google News Preferred Icon

தனியார் வாடகை கார் நிறுவனங்களான 'கிராப்', 'உபர்' வாகனப் பயணங்களுக்குச் சலுகை தருவதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த ஆடவருக்கு எதிராகக் குறைந்தது ஒன்பது புகார்கள் கிடைக்கப்பெற்றன என்று தெரிவித்த பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் தீவிர புலனாய்வுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்ததாக நேற்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது.