விரைவுச்சாலையில் விபத்து; லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி மரணம்

விரைவுச்சாலையில் விபத்து; லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி மரணம்

1 mins read
9d12c15c-17a4-49cb-b433-749861a17ec0
-

கிராஞ்சி விரைவுச்சாலையில் கனரக வாகனத்தின் பின் பகுதியின் மீது லாரி ஒன்று நேற்று பிற்பகல் மோதியது. இதில் 69 வயது லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் லாரிக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை வெளியே எடுத்தனர். விசாரணை நடத்தப்படுகிறது.

விபத்தின் காரணமாக மிக மோசமாகச் சேதமடைந்த லாரி (இடது). படம்: ‌ஷின்மின்