இமாம் சர்ச்சை கருத்து தொடர்பான போலிஸ் விசாரணை முடிவுற்றதாக அமைச்சர் தகவல்

இமாம் சர்ச்சை கருத்து தொடர்பான போலிஸ் விசாரணை முடிவுற்றதாக அமைச்சர் தகவல்

1 mins read

கிறிஸ்துவர்கள், யூதர்கள் பற்றி சர்ச்சைக்கு இடமான கருத்து களைத் தெரிவித்த இமாம் தொடர் பான புலன்விசாரணைகளை போலிஸ் நடத்தி முடித்திருக்கிறது. அந்த விசாரணை அறிக்கை தலைமைச் சட்ட அதிகாரி அலு வலகத்தில் தாக்கல் செய்யப் படும். அதன் தொடர்பில் விரை வில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று இந்த விவ ரங்களைத் தெரிவித்தார். முஸ்லிம் பட்டத்தொழிலர்கள் சங்கம் ஏற் பாடு செய்த ஓர் ஆய்வரங்கில் கலந்துகொண்டு அமைச்சர் பேசி னார். கிறிஸ்துவர்களுக்கும் யூதர் களுக்கும் எதிராக அத்தகைய சர்ச்சைக்கு இடமான கருத்து களை வெளியிட்ட இமாம் நல்லா முகம்மது அப்துல் ஜமீல், வெள்ளிக்கிழமையன்று நடந்த பிரத்தியேகக் கூட்டம் ஒன்றில் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த தலைவர்களிடையே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த இமாம் பற்றிய ஒரு காணொளி இணையத்தில் வலம்வந்தது.