ஜூரோங் பாய்ண்ட் கடைத் தொகுதியில் கடத்தல் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக கடந்த புதன்கிழமை பரப்பப்பட்ட பொய்யான தகவல் தொடர்பில் இருவர் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக போலிஸ் தெரிவித் துள்ளது. அந்தக் கடைத்தொகுதியில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்ட தாகவும் அதன் தொடர்பில் இருவரை போலிஸ் கைது செய்ததாகவும் தவறான செய்தி இணையத்தில் பரவியது. அதனையடுத்து, பொதுமக்க ளிடையே தேவையில்லாத அச் சத்தை ஏற்படுத்தியதற்காக 45 வயது ஆடவர் ஒருவர் மீதும் 40 வயது மாது ஒருவர் மீதும் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் தலா $5,000 வரை அபராதம் விதிக்க ப்படலாம்.
ஜூரோங் பாய்ண்ட்டில் கடத்தல் புரளி: பொய் தகவல் பரப்பிய இருவர் மீது விசாரணை
1 mins read

