வேலைதேடும் நிபுணர்களுக்கு பொங்கோலில் தகவல் நிலையம்

வேலைதேடும் நிபுணர்களுக்கு பொங்கோலில் தகவல் நிலையம்

1 mins read

வேலை தேடும் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கு உதவ முதல் தகவல் நிலையம் நேற்று பொங்கோல் 21 சமூக மன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. அவ்வட்டாரத்தில் கடந்த ஆண்டு 'பிஎம்இடி'கள் அதிக மானோர் வேலைவாய்ப்புக்காக உதவிநாடி பணி நியமன நிலையங்களை அணுகினர். அதைத் தொடர்ந்து, வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அந்தத் தகவல் நிலையத்தை அமைத்து முதல் ஆண்டில் அதை இயக்க $200,000 நிதி வழங்கியது. வடகிழக்கு வட்டாரத்தில் உள்ள 860,000 குடியிருப்பாளர் களில் கிட்டத்தட்ட 11,000 வேலையில்லாத 'பிஎம்இடி'கள் இருப்பதாக வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் தெரிவித்தது.