பூமலையில் $30 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் கற்றல் வனப்பகுதி, 10 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. பூமலையின் வரலாற்றில் முதன் முதலாக பொதுமக்களுக்கு அந் தப் பகுதி இப்போது கவர்ச்சிகர மான ஓர் அம்சமாக திறந்துவிடப் பட்டு இருக்கிறது. 15 காற்பந்து திடல்களுக்குச் சமமான நிலப்பரப் பில் அமைந்திருக்கும் அந்தக் வனப்பகுதி, ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அதற்குக் 'கற்றல் வனம்' என்று பெயர். வருகையாளர்கள் வசதியாக நடந்து சென்று பலவற் றையும் கற்று அறிந்துகொள்ள தோதாக அங்கு ஏராளமான வசதி கள் இருக்கின்றன. அதில் இப் போது 120,000 தாவரச் சிற்றினங் கள் வளர்கின்றன. சிங்கப்பூருக்கும் இந்த வட் டாரத்திற்கும் உரிய பலதரப்பட்ட தாவரங்கள் அங்கு வளர்க்கப்படு கின்றன. கற்றல் வனம் கால வோட்டத்தில் வளர வளர இந்தத் தாவர வளத்தின் அளவும் அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பூமலையில் அமைந்துள்ள கற்றல் வனத்தின் ஒரு பகுதியான எஸ்பிஎச் பெரு உலா பகுதியில் கயிற்று இருக்கைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

