அனாமதேய பை; பயம், பரபரப்பு; ஹவ்காங் நிலையம் மூடல்; 39 வயது ஆடவர் கைது

அனாமதேய பை; பயம், பரபரப்பு; ஹவ்காங் நிலையம் மூடல்; 39 வயது ஆடவர் கைது

1 mins read
d8d3a534-d02b-4c23-995f-de5457872f0d
-

ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று ஒரு பையை வைத்துவிட்டு போய்விட்ட 39 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய் தது. இந்தச் சம்பவம் காரணமாக கொஞ்சநேரம் அந்த நிலையம் மூடப்பட்டது. ஹவ்காங் எம்ஆர்டி நிலைய நடைமேடையில் நேற்று பிற்பகல் சுமார் 2.40 மணிக்கு ஒரு பை காணப்பட்டது. பாதுகாப்பை உத் தேசித்து சுமார் 3 மணி முதல் வடக்கு=கிழக்கு வழித்தடத்தில் சேவையாற்றிய எல்லா ரயில் களும் அந்த எம்ஆர்டி நிலை யத்தை தவிர்த்துக்கொண்டன.

பயணிகள் பேருந்து சேவைக்கு அல்லது இதர ரயில் நிலையங் களுக்குத் திருப்பிவிடப்பட்டனர். இந்தக் காரியத்தின் ஊடே, முதிய மாது ஒருவர் காயம் அடைந்துவிட்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஹவ்காங் எம்ஆர்டி நிலையம் முற்றிலும் அடைக்கப் பட்டது. அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.

ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவரை போலிஸ் கொண்டு செல்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்