உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆறு வாகனங்கள் சிக்கிய விபத்து

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆறு வாகனங்கள் சிக்கிய விபத்து

1 mins read
f3a54429-89fa-4cf9-8655-89a87cd5f413
-

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யில் நேற்றுக் காலை ஐந்து கார்களும் மலேசியாவில் பதியப் பட்ட ஒரு பேருந்தும் விபத்தில் சிக்கின. அதிகாலை 4.30 மணிக்கு அது பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்தையடுத்து 60க்கும் மேற்பட்ட வயதுள்ள ஒரு மாது, 50க்கும் அதிக வயதுள்ள ஓர் ஆடவர் ஆகியோர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற் றொரு தம்பதி மருத்துவமனைக் குச் செல்ல மறுத்துவிட்டனர். விபத்தில் சிக்கிய, மலேசிய பதிவு எண் தகட்டுடன் கூடிய நீல நிறப் பேருந்து சாலை ஓரமாக புதர் பக்கம் விலகி நின்றது.

விபத்து காரணமாக குறைந்தபட்சம் ஒரு கார் படுமோசமாகச் சேதம் அடைந்துவிட்டது என்று மலேசிய ஊடகங்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள் மூலம் தெரியவந்தது. படம்: மலேசியா டுடேயின் ஃபேஸ்புக் பக்கம்