மியன்மார், இலங்கை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பன்னாட்டு பணிப்பெண்கள்

மியன்மார், இலங்கை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பன்னாட்டு பணிப்பெண்கள்

1 mins read
3057335e-994d-4df0-9c6a-673b4e6024e4
-

மியன்மார், இலங்கை புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நேற்று பல நாடுகளைச் சேர்ந்த சிங்கப்பூர் பணிப்பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தனர். சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டு இல்ல பணிப்பெண்கள் சங்கம் ஏற்பாடு செய்த அந்தக் கொண்டாட்டத்தில் பாரம்பரிய இசை, கலாசார நவீன உடை அலங்காரக் காட்சிகள், பாடகிகளின் இசை நிகழ்ச்சி ஆகிய பலவும் இடம்பெற்றிருந்தன. சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் நிமல் வீரரத்ன, மியன்மார் தூதரகத்தின் துணைத் தலைவர் வின் மியின்ட் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்