இமாமுக்கு $4,000 அபராதம்

இமாமுக்கு $4,000 அபராதம்

1 mins read
d226f46a-0590-4159-8e07-345440f7df5d
-

கிறிஸ்தவர்களுக்கும் யூதர் களுக்கும் எதிராக சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக இமாம் எனப்படும் சமய போத கரான நல்லா முகம்மது அப்துல் ஜமீல் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 47 வயதான அவர், சமயம் என்ற பெயரில் வெவ்வேறு வித குழுக்கள் இடையே விரோ தத்தை வளர்க்கும் விதமாகப் பேசியதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவ ருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதித்தார் நீதிபதி ஜஸ்விந்தர் கவுர். குற்றத் தண்டனைச் சட்ட விதிகளின்படி இமாமுக்கு மூன் றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்பட்டு இருக்கலாம். அரேபிய மொழியில் நடை பெற்ற ஒரு வழிபாட்டில் 'கிறிஸ் துவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராகக் கடவுள் நம்மை காப் பார்' என்று இமாம் பேசிய காணொளி ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் இணையத்தில் வலம் வந்தது. சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள ஜாமியா மசூதியில் பணிபுரிந்து வந்த அவர் மீது போலிஸ் விசாரணை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் விடுப்பில் வைக்கப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த இமாம் நல்லா முகம்மது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்