தவறிழைக்கும் கனரக வாகமோட்டிகள்: 45 விழுக்காட்டினர் வெளிநாட்டினர்

தவறிழைக்கும் கனரக வாகமோட்டிகள்: 45 விழுக்காட்டினர் வெளிநாட்டினர்

1 mins read

கடந்த ஐந்தாண்டுகளில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனமோட்டிகளில் 45 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்று உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 791 கனரக வாகன விபத்துகள் நிகழ்கின்றன. இதில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 39, உயிரிழப்புகளை ஏற்படுத்து பவை என்றார் அவர். தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் ஜோன் பெரேராவின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு முதல் விதிமீறல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து போலிஸ் வேகக் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ உள்ளது என்றார். ஒரு பகுதிக்குள் நுழைந்து வெளியே வரும் வரையில் வாகனத்தின் சராசரி வேகத்தை கேமரா பதிவு செய்து, பாதுகாப்பான வேகத்தில் வாகனமோட்டி வாகனத்தை ஓட்டு வதை உறுதிப்படுத்தும் என்றார் அவர். அத்துடன் கனரக வாகனத்தின் வேகப் பதிவை அளவிடும் சோதனைகளும் நடைபெறும் என அவர் கூறினார்.