தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளர்ப்பு மகனை துன்புறுத்திய ஆடவருக்கு ஏழு மாதச் சிறை

1 mins read

தங்கும் விடுதி பராமரிப்பாளர் ஒருவர், தமது வளர்ப்பு மகனை உடல்ரீதியாகத் துன்புறுத்தி அவரைச் சுத்தியலால் தாக்க மிரட்டியதற்காக அந்த ஆடவருக்கு நேற்று ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பதின்ம வயதுடைய வளர்ப்பு மகனின் அடையாளத்தை வெளிப் படுத்தாமல் இருப்பதற்காக அந்த 44 வயது ஆடவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தமது வளர்ப்பு மகனைத் துன்புறுத்தி மிரட்டியதாகக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இப்போது இணைந்து வாழாத அத்தம்பதியினர், விவா கரத்து செய்துகொள்ள உள்ளனர்.