காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் இதயக் கோளாறுக்கும் தொடர்பு

காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் இதயக் கோளாறுக்கும் தொடர்பு

1 mins read

காற்றுத் தூய்மைக்கேட்டுத் தர அட்டவணைப்படி முடிவுசெய்யப் படும் காற்றுத் தரம் குறைவாக இருந்தால் மருத்துவமனைக்கு வெளியே மனிதர்களுக்குத் திடீ ரென்று இதயம் நின்றுபோகும் ஆபத்து அதிகம் என்று நாடளா விய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வாளர்கள் 2010 முதல் 2015 வரை 8,000 அதிக சம்பவங் கள் தொடர்பான புள்ளிவிவரங் களை ஆராய்ந்தார்கள். சிங்கப்பூரின் காற்றுத் தர குறி யீட்டு அட்டவணை 50க்கும் மேற்பட்ட பாதகமான அளவிலும் (100க்கும் அதிகம்) இருந்தபோது மருத்துவமனைக்கு வெளியே மனி தர்களுக்கு இதயம் திடீரென்று நின்றுபோய்விட்ட சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்தன என்பது அந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.