டே ஹுய் லிங், 42, என்ற முன்னாள் கணக்குப் பதிவு மேலாளர் ஒருவர், தான் வேலை பார்த்த நிறுவனத் தின் 21 காசோலைகளில் மோசடி செய்தார். அதன் மூலம் 2015 டிசம்பர் 1ஆம் தேதிக்கும் சென்ற ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதிக்கும் இடையில் ஐந்து மாத காலத்தில் அவர் $336,242 தொகையைப் பெற்று எல்லா பணத்தையும் சூதாடினார். இந்த மாதுக்கு ஏழு ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டது.
டே ஹுய் லிங். இவருக்கு ஏழு ஆண்டு சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

