பாரந்தூக்கி பிடிப்பிலிருந்து சரிந்து கீழே விழுந்த ஐந்து இரும்புக் கம்பிகள்

பாரந்தூக்கி பிடிப்பிலிருந்து சரிந்து கீழே விழுந்த ஐந்து இரும்புக் கம்பிகள்

1 mins read

பாலஸ்டியர் சாலையில் நேற்று ஐந்து இரும்புக் கம்பிகள் பாரந் தூக்கியின் பிடிப்பிலிருந்து சரிந்து கீழே விழுந்தன. இதன் பாதிப் பிலிருந்து பாதசாரிகளும் வாகனங் களும் தப்பின. அங்குள்ள கூட்டுரிமை வீட்டு கட்டுமானத் தளத்திலிருந்து மாலை 5 மணியளவில் ஐந்து இரும்புக் கம்பிகள் பாரந் தூக்கியிலிருந்து சரிந்து கீழே விழுந்தன. கீழே விழுந்த இரும்புக் கம்பிகள் ஒவ்வொன்றும் சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது என்று மனிதவள அமைச்சு கூறியது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. கீழே விழுந்தவற்றில் நான்கு கம்பிகள் 10 மாடிகளுக்கு மேல் உள்ள உயரத்திலிருந்து விழுந் ததாக லியான்ஹ வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது. அவற்றில் ஒன்று பாதசாரிகள் நடைபாதைக்கு அருகே விழுந்தன. அதற்குப் பின்னால் ஓர் ஆடவரும் மாது ஒருவரும் நடந்து சென்றுகொண்டிருந்த தாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த நாளிதழிடம் கூறினார்.