இந்த ஆண்டு இந்தோனீசியா வின் தென் சுமத்ராவிலிருந்து புகைமூட்ட பிரச்சினை வராது என்று அதன் ஆளுநர் அலெக்ஸ் நோர்டின் உறுதி தெரிவித்துள் ளார். 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த மோசமான புகைமூட்ட பிரச்சி னைக்குப் பிறகு காட்டுத் தீயைத் தடுக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டு எவ்வித புகைமூட்ட பிரச் சினையும் நிகழவில்லை என்றார் திரு நோர்டின். "தீத்தடுப்பு முயற்சிகளை நாங் கள் இந்த ஆண்டு மேலும் வலுப் படுத்தவிருக்கிறோம். தீ இல்லை என்றால் தென் சுமத்ரா மாகாணத் திலிருந்து இந்த ஆண்டு புகை மூட்டப் பிரச்சினை வராது. "அடுத்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் இந்தப் போக் கைக் கடைப்பிடிக்கப் போகி றோம்," என்றும் திரு நோர்டின் கூறினார்.
2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தென் சுமத்ராவின் ஓகான் கொமரிங் லிர் பகுதியில் தீப்பற்றி எரிந்த பகுதியை ஹெலிகாப்டரின் துணை கொண்டு ஆகாயத்திலிருந்து நீரை வீரர்கள் பீய்ச்சி அடிக்கின்றனர் . படம்: ஏஎஃப்பி

