'சிங்கப்பூருடனான இரு தரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும்'

'சிங்கப்பூருடனான இரு தரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும்'

1 mins read

அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான கடப்பாட்டை மறுவுறுதிபடுத்தியிருக்கிறார். அதோடு சிங்கப்பூருடனான உறவை மேலும் வலுப்படுத்தவும் அவர் உறுதி பூண்டுள்ளார். அமெரிக்காவில் பென்டகன் அலுவலகத்தில் திரு ஜேம்ஸ் மேட்டிசைச் சந்தித்துப் பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இந்த விவரங்களை வெளியிட்டார். நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் சிங்கப் பூரின் ஷங்ரிலா கலந்துரை யாடலில் திரு மேட்டிஸ் பங் கேற்கவிருக்கிறார் என்றும் அவர் சொன்னார். ஆண்டுதோறும் மே மாதவாக் கில் ஷங்ரிலா கலந்துரையாடல் நடைபெறுவது வழக்கம். அதில் உலகின் உயர் மட்ட ராணுவத் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னை வரவேற்ற அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ். படம்: ஏஎஃப்பி