சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய நிறு வனர் கொங் ஹீக்கு விதிக்கப் பட்ட எட்டாண்டு சிறைத் தண்டனை மூன்றரை ஆண்டுகளாகக் குறைக் கப்பட்டது. நம்பிக்கை மோசடி, கணக்கு களைப் பொய்யாகப் பதிவு செய் தது போன்ற குற்றங்களில் கொங் ஹீக்கு உடந்தையாக இருந்த மேலும் ஐவரின் தண்டனைக் காலமும் குறைக்கப்பட்டது. தேவாலய நிறுவனர் கொங் ஹீயின் மனைவி கோ யாவ் சன் னின் இசைத் தொழிலுக்கு உதவு வதற்காக தேவாலயத்திற்குச் சொந் தமான $24 மில்லியன் தொகையைக் கையாடி, அவற்றைப் போலியாக முதலீடு செய்ததாக அந்த அறுவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், தங்களது குற்றங் களை மறைப்பதற்காக மேலும் $26 மி. பணத்தை அவர்கள் செலவிட்ட தாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 2013ல் தொடங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் குற்றவாளி கள் என 2015ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரம் 2015 நவம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய நிறுவனர் கொங் ஹீ, 52. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

