சமய, இன நல்லிணக்கத்துடன் திகழும் ஒற்றுமையான சமூகங் களை உருவாக்க இளையர்கள் கூடுதலாக பங்களிக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளையர்கள் மொழி, கலா சாரத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலி யுறுத்தினார். தேசிய அடையாளத்தை உரு வாக்குவதுடன் நமது கலாசாரத் தில் வேரூன்றி இருப்பதும் முக் கியம் என்பதை மறைந்த திரு லீ குவான் இயூ நம்பினார் என்றார் அமைச்சர் சண்முகம்.
"சமய, கலாசார அடையாளம் மனோபலத்தைக் கொடுக்கிறது, அதுதான் ஒருவரைச் செதுக்கு கிறது. இதை அடைவதற்கு ஒரு வழிதான் மொழி. அதனால்தான் பள்ளிகளில் இரண்டாம் மொழி கற்பிக்கப்படுவதை வலியுறுத்து கிறோம்," என்றார் திரு சண்முகம். சிங்கப்பூரில் சிறுபான்மையின ராக இந்தியர்கள் இருந்தாலும் உலகிலேயே தமிழ் மொழியை அதிகாரத்துவ மொழிகளாகக் கொண்ட சில நாடுகளில் சிங்கப் பூரும் ஒன்று என்று கூறிய அவர், இதுபோன்றே தேசிய அடையாளம் அதுவாக காலப்போக்கில் உரு வாகவேண்டும் என்றார்.

