போலிஸ் தகவல்: போலி தங்கக் கட்டிகளை விற்க முயன்ற மேலும் அறுவர் கைது

போலிஸ் தகவல்: போலி தங்கக் கட்டிகளை விற்க முயன்ற மேலும் அறுவர் கைது

1 mins read

போலி தங்கக் கட்டிகளை விற்க முயன்றதற்காக இரு ஆடவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் பிடிபட்டதை அடுத்து மேலும் அறுவர் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூ கூன் சாலை, கம்போங் ஜாவா சாலை, யீ‌ஷுன், ஊட்ரம் சாலை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 17 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆறு ஆடவர்கள் கைதாகினர். இந்தப் பரிசோதனை நடவடிக் கைகளில் மொத்தம் 45 போலி தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப் பட்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.