கல்கியின் பிரபல நாவலான சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகமாக நேற்று உயிர்பெற்றது. தமிழ்மொழி விழாவை முன்னிட்டு 'சியாமா' எனும் உள்ளூர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களுடன் இலங்கையின் தியாகராஜர் கலைக் கோயிலைச் சேர்ந்த சுமார் 20 கலைஞர்கள் ஒன்றிணைந்து கண்களுக்கு விருந்தளித்தனர். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சரியாக மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நாட்டிய நாடகம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
உயிர்பெற்று வந்த 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம்
1 mins read
-

