சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயம் மேல்முறையீட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் கா. சண்முகம்

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயம் மேல்முறையீட்டு தீர்ப்பு குறித்து அமைச்சர் கா. சண்முகம்

1 mins read
69dee545-42c9-40b0-a3fb-72fd691bb652
-

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய வழக்கு தொடர்பில் கூடுதலான நடவடிக்கை எடுப்பதன் சாத்தியம் குறித்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் பரிசீலித்து வருவ தாகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து இருக் கிறார். இது குறித்து அடுத்த வார தொடக்கத்திற்குள் முடிவு எடுக்கப் படும் என்று அவர் கூறினார். நம்பிக்கை மோசடி, கணக்கு களைப் பொய்யாகப் பதிவு செய் தது போன்ற குற்றங்கள் புரிந்த ஆறு தேவாலயத் தலைவர்களின் தண்டனைக் காலம் மேல்முறை யீட்டைத் தொடர்ந்து கிட்டத்தட்டப் பாதியாகக் குறைக்கப்பட்டிருந்தது. தேவாலய நிறுவனர் கொங் ஹீயின் மனைவி ஹோ யாவ் சன்னின் இசைத் தொழிலுக்கு உதவுவதற்காக தேவாலயத்திற்குச் சொந்தமான $24 மில்லியன் தொகையைக் கையாடி, அவற்றைப் போலியாக முதலீடு செய்ததாக அந்த அறுவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், தங்களது குற்றங் களை மறைப்பதற்காக மேலும் $26 மில்லியன் பணத்தை அவர்கள் செலவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்குத் தொடக்கத்தில் விதிக்கப்பட்டிருந்த தண்டனை மிகவும் குறைவு என்று கருதுகின்ற தலைமைச் சட்ட அதிகாரி அலு வலகம் மேல்முறையீடு செய்ததாக திரு சண்முகம் கூறினார்.

'ஒன்பீப்பள்.எஸ்ஜி' என்ற அமைப்பின் ஆதரவுடன் 'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற இளையர் அமைப்பு, பன்முகத் தன்மையான சமயங்களுடன் ஒற்றுமையாக வாழ்தல் குறித்து அமைச்சர் சண்முகத்துடன் நேற்று கலந்துரையாடினர். படம்: திமத்தி டேவிட்