பிரதமர் லீ: யுரே‌ஷியர்களின் தொண்டு குறிப்பிடத்தக்கது

பிரதமர் லீ: யுரே‌ஷியர்களின் தொண்டு குறிப்பிடத்தக்கது

1 mins read

சிங்கப்பூரில் யுரே‌ஷியர்கள் சிறிய இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நாட்டுக்கு அவர்கள் பல குறிப்பிடத்தக்க தொண்டு களை ஆற்றியிருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் பாராட்டி இருக்கிறார். சிங்கப்பூரில் இரண்டாவது அதிபரான டாக்டர் பெஞ்சமின் ‌ஷியர்ஸ், மேல்முறையீட்டு நீதிபதி யாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியான நீதிபதி ஜுடித் பிரகாஷ், சிங்கப்பூரின் முதல் சட்ட அமைச்சரான ஈ டபிள்யூ பார்க்கர், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் போன்றவர்கள் புகழ்பெற்ற யுரே‌ஷியர்களில் சிலர் என்று திரு லீ குறிப்பிட்டார்.