சாய் சீ அவென்யூவில் சனிக் கிழமையன்று ஓர் ஆடவரை கத்தி யால் வெட்டியதாகக் கூறப்படு வதையொட்டி 66 வயது நபர் ஒருவர் கைதாகியிருக்கிறார். ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட 58 வயது ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் சாய் சீ அவென்யூவில் இருக்கும் 38வது புளோக்கில் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு நிகழ்ந்தது.
58 வயது ஆடவரை கத்தியால் தாக்கிய 66 வயது ஆடவர்
1 mins read

