தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை விபத்தில் 38 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read

உட்லண்ட்சில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு டாக்சி சம்பந்தப்பட்ட விபத்தில் 38 வயது வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். கெம்பாஸ் அவென்யூவும் உட் லண்ட்ஸ் அவென்யூ 7ம் சந்திக் கும் இடத்தில் இரவு சுமார் 11.20 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்த தாக போலிஸ் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பில் சிட்டி கேப் டாக்சி நிறுவனத்தின் 49 வயது ஓட்டுநர் ஒருவர் கைதாகி இருக்கிறார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.