இசையுடன் கவிதை வழங்கிய கவிமணம்

1 mins read
0cbf0762-ba94-4d72-bbc2-fccad88297e3
-

தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக கவிதைகளை விரும்புவோர் கவிதைகளை இனிமையான இசைப் பின்னணியுடன் ரசிக்கும் வாய்ப்பைத் தந்தது 'கவிமணம்' நிகழ்ச்சி. சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ் மொழி விழாவையொட்டி கவிமணம் என்ற நிகழ்ச்சியை மூன்றாம் முறையாக ஏற்பாடு செய்திருந்தது. கடந்த வெள் ளிக்கிழமை மாலை நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், 'காதல் என்றால்' என்ற தலைப்பில், பல கவிஞர்களும் கவிதை ஆர்வலர்களும் தங்களது கவிதைகளை அனுப்பிவைத் திருந்தனர். இறுதிப் போட் டிக்குப் பதிமூன்று பேர் சிங்கப் பூர் குடிமக்கள், ஏழு பேர் நிரந்தரவாசிகள், ஏழு வெளி நாட்டு ஊழியர்கள் தகுதி பெற்றனர்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர். ராஜாராம் சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சிங்கப்பூரின் மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறனுக்கு (வலது) பரிசு வழங்கினார். படம்: சிங்கப்பூர் இந்தியர் சங்கம்