கிளமெண்டி கடைத்தொகுதியில் கார் தீப்பிடித்தது; 30 பேர் வெளியேற்றம்

கிளமெண்டி கடைத்தொகுதியில் கார் தீப்பிடித்தது; 30 பேர் வெளியேற்றம்

1 mins read

கிளமெண்டி கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் திடீரென்று தீப்பிடித்தது. தீயில் இருந்து கிளம்பிய புகையினால் அவசர சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கடைத்தொகுதியில் இருந்த வாடிக்கையாளர்களையும் கடைக்காரர்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர். ஞாயிற்றுக்கிழமை மாலை பிற்பகல் 1.15 மணிக்கு இச்சம்பவம் நடந்ததாக வான் பாவ் பத்திரிகை செய்தி தெரிவித்தது.